இமாச்சல பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் காங்கிரசின் சுக்விந்தர் சிங்

0 1235

இமாச்சல பிரதேச முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றுக்கொண்டார்.

ஷிம்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிகோத்ரியும் பதவியேற்றுக்கொண்டார். விழாவில்,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

58 வயதான சுக்விந்தர் சிங் சுகு, நடான் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments