வீட்டின் முன் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திய மர்ம நபர்கள்..!

0 1349

சென்னை அமைந்தக்கரையில், வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொளுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

எம்.எச்.காலனியில் வசிக்கும் ஆனந்தராஜ் என்பவர் தனது மகனுக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

நேற்றிரவு அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தியதாக சிசிடிவி பதிவுகளுடன் அவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டுக்காரரான சரவணன் என்பவர், ஆட்களை வைத்து இருசக்கர வாகனத்தை கொளுத்தியதாக ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments