மாணவர்களை அடித்ததாக ஒரே நேரத்தில் 2 தலைமை ஆசிரியைகள் உட்பட 3 பேர் பணியிடமாற்றம்..!

0 1657

சேலம் ஓமலூர் அருகே, அரசுப்பள்ளி மாணவர்களை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒளிபரப்பப்பட்ட குறும்படத்தை கவனிக்காத மாணவர்களை, தலைமை ஆசிரியை வசந்தகுமாரி அடித்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் கொளத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கல்பனா, உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என புகார் எழுந்ததால், அவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே, ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் குறித்து, வகுப்பாசிரியர்
என்ற முறையில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காத ஆசிரியை தனலட்சுமியையும் பணியிட மாற்றம் செய்து, முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments