அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழப்பு..!

0 2081

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்த நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக அரசு மருத்துவர் மீது குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பன்னால்கீழடுக்கு சேர்ந்த வீரசேகரனின் மனைவி திருமுருகப்பிரியா பிரசவத்திற்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் (குழந்தைக்கு தொப்புள்கொடி சுற்றியிருந்ததால்) மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சனிக்கிழமை மாலை பிரசவ வலி வந்து பனிக்குடம் உடைந்ததையடுத்து சுகப்பிரசவம் ஆகும் என்று கூறிய மருத்துவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

பிறகு குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மருத்துவரின் மீது நடவடிக்கை எடுக்கும்வரை குழந்தையின் உடலை வாங்கமாட்டோம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments