மதுபார்களுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல்.. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகளிடம் சிபிஐ விசாரணை..!

டெல்லியில் மதுபார்களுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி மீதான இந்த குற்றச்சாட்டில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் தெலங்கானா எம்எல்சியுமான கவிதாவிற்கும் தொடர்பு இருப்பதாக கருதிய சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
விசாரணைக்கு எப்போதும் தயாராக இருப்பதாக கவிதா தெரிவித்திருந்த நிலையில், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments