ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனை தாண்டி மறுபக்க சாலையில் கவிழ்ந்து விபத்து..!

0 1305

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி சென்று மறுப்பக்க சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தது, அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

காசிபாளையம் கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்ட போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments