ஆப்பிள் போன் பயன்பாட்டாளர்களுக்கு அதிக கட்டணத்தில் டிவிட்டர் ப்ளூ டிக் சேவை..!

0 5669

டிவிட்டர் கணக்கு வைத்துள்ள ஆப்பிள் போன் பயன்பாட்டாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட டிவிட்டர் ப்ளூ டிக் சேவையை, நாளை முதல் அதிக கட்டணத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் ட்வீட்களைத் திருத்தவும், 1080 பிக்சல்(1080 pixel) வீடியோக்களைப் பதிவேற்றவும், நீல நிற ப்ளூ டிக் கணக்கு சரிபார்ப்பை பெற முடியும்.

இந்த சிறப்பம்சங்கள் இணையத்தில் மாதத்திற்கு 8 டாலர்களுக்கும், iOs ஆப் ஸ்டோரில் 11 டாலர்களுக்கும்  விற்பனை செய்யப்படும்.

மற்ற பயனாளர்களை விட ஆப்பிள் பயன்பாட்டாளர்களுக்கு ஏன் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை டிவிட்டர் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஈடுசெய்வதற்கான நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகை செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments