ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால், இருளில் மூழ்கிய உக்ரைனின் ஒடேசா நகரம்..!

0 1036

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஈரான் வழங்கிய ஷாஹெட்-136 ட்ரோன்களைக் கொண்டு 2 மின் நிலையங்களை ரஷ்ய படைகள் தாக்கியதால், மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒடேசாவில் நிலைமை மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒடேசாவில் மின்சாரத்தை மீட்டெடுக்க சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்த ஜெலென்ஸ்கி, சேதமடைந்த மின் கட்டமைப்புகளை முழுமையாக சீரமைக்க 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments