மெக்சிகோ நாட்டில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற டிரக் திடீரென கவிழ்ந்து விபத்து..!

மெக்சிகோவின் லாஸ் சோபாஸ் பகுதியில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்ததோடு, 24 பேர் படுகாயமடைந்தனர்.
டிரக் ஓட்டுநர் வளைவில் வேகமாக திரும்பிய போது, டிரக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த டிரக்கில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயந்தோர் பயணம் செய்ததாகவும், விபத்து நேர்ந்ததும் பெரும்பாலானோர் தப்பி ஓடிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments