உக்ரைன் மீதான போர் நீண்ட காலம் நீடிக்கும் - ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்..!

உக்ரைன் மீதான போர் இன்னும் நீண்டகாலம் நீடிக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர் களத்தில் உள்ள வீரர்களை திரும்ப அழைக்கும் எண்ணம் இல்லை என்று கூறினார். போர் நீண்டகாலம் நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்து ஒன்பது மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் போர் எப்போது முடியும் என்பது குறித்து புதின் ஏதும் கூறாமல் இருந்தார்.
முதன்முறையாக போர் நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Comments