அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் குழாயில் ஏற்பட்ட விரிசலால் எண்ணெய்க் கசிவு..!

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் உள்ள வாஷிங்டன் கவுண்டியில் கீ ஸ்டோன் எண்ணெய்க் குழாயில் விரிசல் ஏற்பட்டு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் கான்சாஸ் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அவசரகால துப்புரவு குழுக்கள் எண்ணெய்க் கசிவை சுத்தம் செய்யும் பணியில் கடுமையான குளிர் மற்றும் உறைபனிக்கு அஞ்சாமல் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
(ஏராளமான தொழிலாளர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்) முதலீட்டாளர்கள் எண்ணெய்க் கசிவுக்குக் காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments