15 ஆண்டுகளாக தென் மாநிலங்களில் திருடி வட மாநிலங்களில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள..!

0 1740

15 ஆண்டுகளாக தென் மாநிலங்களில் கொள்ளையடித்து தப்பிச் சென்று வட மாநிலங்களில் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

(தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த 15 ஆண்டுகளாக) வங்கிகள், நகைக் கடைகள், வீடுகள் ஆகியவற்றில் கொள்ளையடித்து, சட்டிஸ்கர் மாநிலத்திற்கு சென்று ஒளிந்து கொள்வதை கொள்ளைக் கும்பல் வழக்கமாக வைத்திருந்தனர்.

ஆந்திராவில் உள்ள நகை அடகுக்கடையில் 2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தென் மாநிலங்கள் முழுவதும் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

(இந்நிலையில்) திருப்பதி அருகே கொள்ளைக் கும்பல் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சென்ற போலீசார், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் ராஜா ஆகியோரை மடக்கி பிடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments