இங்கிலாந்து அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி.. வெற்றி கொண்டாட்டத்தில் வெடித்தது கலவரம்..!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம் வெடித்தது.
போர்ச்சுக்கல்லை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
தொடர்ந்து, இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் அணி. இதனால், பாரீஸ் தெருக்களில் ஒன்றிணந்த வெற்றியடைந்த அணியின் ரசிகர்கள் கொடிகளை அசைத்து கோஷமிட்டு, பட்டாசுகளை கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலீஸாருடன் கலவரமாக மாறி தீவிரமடைந்ததால் கண்ணீர் புகை குண்டு வீசி போலீசார் விரட்டியடித்தனர்.
Comments