நிலவுக்கு பயணம் செல்லும் இந்திய தொலைக்காட்சி நடிகர்..!

0 1860

ஜப்பானிய கோடீஸ்வர தலைமையிலான குழுவினர் அடுத்தாண்டு நிலவுக்கு செல்லவுள்ள நிலையில், இந்திய நடிகர் ஒருவர் அதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

எலான் மஸ்க்-கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் ஜப்பானிய கோடீஸ்வரர் யுசாகு மேசாவா தலைமையிலான குழுவினர் நிலவுக்கு செல்ல உள்ளனர். பயணத்திற்கு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்பட எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழுவில் இந்தியாவின் சார்பில் நடிகர் தேவ் ஜோஷி இடம் பெற்றுள்ளார். இவர் 3 வயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments