பஞ்சாப் மாநிலத்தில் திடீரென காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் குண்டு வீசித் தாக்குதல்..!

பஞ்சாப் மாநிலம் தான்தரன் மாவட்டத்தில் அமிர்தசரஸ்-பட்டின்டா நெடுஞ்சாலையில் உள்ள சர்ஹாலி காவல் நிலையம் மீது ராக்கெட் வெடிகுண்டு வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் குண்டுகள் அங்குள்ள தூணில் மோதி தடைபட்டதால் யாரும் காயம் அடையவில்லை. காவல்நிலைய கட்டடம் சேதம் அடைந்தது.
இத்தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பஞ்சாபில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய 7 பேரை பிடித்துள்ளனர்.
Comments