என்னை விட்டு உயிர்போனாலும்... உன்னை விட்டு நான் போக மாட்டேன்.. காதலியின் வீடு புகுந்து தாக்குதல்..!
காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்ததால் ஆத்திரம் அடைந்த காதலன் தனது கூட்டாளிகளுடன் சென்று காதலியின் தந்தையை தாக்கி, வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடி பெண்ணை தூக்கிச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
லோபட்ஜெட் தெலுங்குப்பட காட்சிகளை மிஞ்சும் வகையில் கையில் கம்பி, கற்கள் கட்டை என்று பட்ட பகலில் ஒரு வீடு புகுந்து 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்குதல் நடத்துவது ஒரு காதலுக்காக..!
தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் அதிபட்லா பகுதியில் வசிப்பவர் வைஷாலி . 24 வயதான பல் மருத்துவரான வைஷாலியும், நவீன் ரெட்டி என்பவரும் ஒருவரை யொருவர் காதலித்து வந்துள்ளனர் .
கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். காதலியை தினமும் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று காதலியின் வீட்டுக்கு எதிரே நவீன் ரெட்டி சொந்தமாக டீக்கடை ஒன்றை போட்டு அங்கேயே தவமிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் வைஷாலிக்கும் , நவீன் ரெட்டிக்கும் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் வைசாலி சம்மதத்துடன் வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
மாப்பிள்ளை வீட்டார் வீட்டில் இருந்த நேரத்தில் நவீன் ரெட்டி தனது அதவாளர்களுடன் வைசாலியின் வீட்டுக்குள் புகுந்து தங்களுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று கூறி வைசாலியை அழைத்துள்ளார். அவர உடன் செல்ல மறுத்ததால் ஆவேசமான நவீன் ரெட்டிஆதரவாளர்களை ஏவி வீட்டில் இருந்தவர்கள் வெளியே இழுத்து போட்டு தாக்கியதுடன் வீட்டை அடைத்து உடைத்து சூறையாடி உள்ளனர்.
வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களும் அடித்து உடைக்கப்பட்டன.
இதையடுத்து நவீன் ரெட்டி வீட்டில் இருந்த வைசாலியை குண்டுக்கட்டாக தூக்கி காரில் கடத்திச்சென்றார்
வைசாலியின் தந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்தும் போலீஸ் வர தாமதமானதால் ஆத்திரம் அடைந்த வைசாலியின் குடும்பத்தினர் நவீன் ரெட்டி நடத்தி வந்த ஹைடெக் டீக்கடையை அடித்து உடைத்து தீவைத்தனர்
கடத்தப்பட்ட தங்கள் பெண்ணை மீட்க கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சுமார் 6 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் நவீன் ரெட்டியிடம் இருந்து வைசாலியை போலீசார் மீட்டனர். தொடர்புடையவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஜோடிகளுக்குள் நம்பிக்கையை உருவாக்காத எந்த ஒரு காதலும் அவர்களாலேயே அழிந்து போவதோடு, சம்பந்தப்பட்டவர்களையும் அது காயப்படுத்தும் என்பதற்கு இந்த தாக்குதல் சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.
Comments