மணமக்களே மண்ட பத்ரம்.. பறந்து வந்த பச்ச மட்டை.. வெட்டிங் ஷூட்டால் காண்டான யானையார்..!

0 1891
மணமக்களே மண்ட பத்ரம்.. பறந்து வந்த பச்ச மட்டை.. வெட்டிங் ஷூட்டால் காண்டான யானையார்..!

கேரளாவில் யானை முன்பு நின்று வெட்டிங் ஷூட் எடுத்து திரும்பிய மணமக்கள் மீது யானை பச்சமட்டையை தூக்கி வீசி அடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருமணம் என்றால் வெட்டிங் ஷூட் ஒளிப்பதிவாளர்கள் செய்யும் ரசனை சேட்டைகள் எல்லை மீறிச்செல்லும். இந்த முறை மணமக்களை பார்த்து காண்டான யானை ஒன்று தனது சேட்டையை காட்டியது.

கேரளாவில் கழுத்து நிறைய நகைகளுடன் மணமகளை அழைத்துச்சென்று மணமகன், யானை முன்பு நின்று பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துவிட்டு இருவரும் ஜோடியாக திரும்பி வந்தனர்.

அப்போது ப்ளையிங் கிஸ் பாணியில் தென்னமட்டை ஒன்றை வீசி "மண்ட பத்ரம்" என்று எச்சரித்துள்ளது யானை. இந்த காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments