இந்திய விமான நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 140 ஆக உயர்வு

இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை 220 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு, இந்தியாவில் 74 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 140 ஆக உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு, கோவாவில் Mopa சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நாளை அந்த விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார்.
இதன்மூலம், கோவாவில் ஆண்டுக்கு ஒரு கோடியே 30 லட்சம் விமான பயணிகளை கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments