பிரார்த்தனை கூட்டத்தில் உக்ரைன் குறித்து பேசத் தொடங்கியதும் கண் கலங்கிய போப் பிரான்சிஸ்..!

பிரார்த்தனை கூட்டத்தில் உக்ரைன் குறித்து பேசத் தொடங்கியதும் கண் கலங்கிய போப் பிரான்சிஸ்..!
ரோமில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில், உக்ரைன் போர் குறித்து பேசிய போது போப் பிரான்சிஸ் கண் கலங்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பிரார்த்தனை கூட்டத்தில் உக்ரைன் என பேசத் தொடங்கியதும் போப்பின் குரல் தழுதழுத்தது. உடனே, கண் கலங்கிய போப் பிரான்சிஸ், பேச முடியாமல் 30 வினாடிகளுக்கு அப்படியே நின்றார்.
அங்கிருந்தவர்கள் அவரை தேற்றியதும் பேசத் தொடங்கிய போப், உக்ரைனில் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள் மிகவும் துன்பப்படுவதாக வேதனை தெரிவித்தார். உக்ரைன் மக்களின் அமைதிக்காக தான் பிரார்த்திப்பதாகவும் போப் பிரான்சிஸ் கூறினார்.
Comments