கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படும் குழாயில் கசிவு.. 14 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் வீணானது..!

அமெரிக்காவில் பைப் லைன் மூலமாக எடுத்துச் செல்லப்பட்ட கச்சா எண்ணையில் கசிவு ஏற்பட்டதால் சுமார் 14 ஆயிரம் பீப்பாய் எண்ணை வீணாகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் தினசரி சுமார் 6 லட்சத்து 22 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதற்காக, குழாய் மூலமாக ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது.
அவ்வாறு மேற்கு கனடாவிலிருந்து வந்துக் கொண்டிருந்த கச்சா எண்ணை வாஷிங்டன் மகாணம் கண்ணாஸ் பகுதியில் கசிந்துள்ளது.
இதனால், அந்தப்பகுதியில் நெடி வீசியதால் உடனடியாக, எண்ணை விநியோகம் நிறுத்தப்பட்டு கால்வாயில் கசிந்த எண்ணையை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் அதற்கான உபகரணங்களோடு ஈடுபட்டு வருகின்றனர்.
Comments