ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த இளைஞர் கடன்தொல்லை காரணமாக தற்கொலை..!

0 1337

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன்தொல்லை காரணமாக ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுவேப்பிலைப்பட்டி பகுதியில் உள்ள பஞ்சுமாயி கோயில் கூரை விட்டத்தில் இளைஞர் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த லைசென்சை வைத்து விசாரித்ததில் அவரது பெயர் மணிமுத்து என்பதும், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் ஓட்டுநராக பணியாற்றி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தில் தற்கொலை செய்துகொள்வதாக மணிமுத்து கடிதம் எழுதியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments