திருமணம் செய்ய வற்புறுத்தி இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய கும்பல்

0 1432

தெலங்கானாவில், வீட்டிற்குள் புகுந்து 24 வயது பெண்ணை கடத்தி சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ரங்கா ரெட்டி மாவட்டம் அடிபட்லா பகுதியில் வசித்து வரும் பயிற்சி பல் மருத்துவர் வைஷாலி என்பவரை, நவீன் ரெட்டி என்பவர் திருமணம் செய்ய வற்புறுத்தி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று, சுமார் 30 பேருடன் வைஷாலியின் வீட்டிற்கு சென்ற நவீன், அவரின் பெற்றோரை தாக்கி, வீட்டை சூறையாடி, வைஷாலியை கடத்தி சென்றுள்ளார். புகாரின்பேரில், சில மணி நேரத்தில் இளம்பெண்ணை மீட்ட போலீசார் நவீன் ரெட்டி உள்பட 18 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், பேட்மிண்டன் விளையாடச் சென்ற இடத்தில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகவும், நவீன் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததை வைஷாலி நிராகரித்ததால் கடத்தல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments