மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 1068
மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், இத்திட்டத்திற்கான இலட்சினையை வெளியிட்டு, தூய்மைப் பணியாளர்களை கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்வதற்கான மொபைல் செயலியையும் வெளியிட்டார்.

பின்னர், தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வி.சி.க சார்பில் அமைக்கப்பட்டிருந்த 28 அடி உயர அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments