விழுப்புரத்தில் கடல் சீற்றம்.. 40-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையால் சேதம் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!

0 1374
விழுப்புரத்தில் கடல் சீற்றம்.. 40-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையால் சேதம் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!

மாண்டஸ் புயலால் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே உள்ள பிள்ளைசாவடி, பொம்மையார் பாளையம் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன.

கரையோரம் இருந்த 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்பதால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 1091 தற்காலிக நிவாரண மையங்கள், 12 புயல் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments