செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

0 1420

மாண்டஸ் புயலால் பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 709 கன அடியாக உள்ள நிலையில், நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 595 கன அடி நீரும், புழல் ஏரிக்கு 140 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments