குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது பாஜக..!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு மேல் அதிக இடங்களில் வென்று தொடர்ந்து 7வது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பாஜக 142 இடங்களில் வெற்றியைப் பதிவு செய்ததுடன், 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பூபேந்திர படேல், ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றிபெற்றுள்ளார்.
காங்கிரஸ் 17 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் வரும் 12ஆம் தேதியன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் அறிவித்துள்ளார்.
Comments