ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

0 4785

சென்னைக்கு வேலைக்கு வந்த இடத்தில் நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடி ரெயிலில் அடிபட்டு பலியாகினர். கடலூர் பையனுக்கு தூத்துக்குடி பெண் மீது மலர்ந்த காதல் தண்டவாளத்தில் முடிந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் அலெக்ஸ். இவர் மறை மலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணான ஷெர்லினுடன் காதல் மலர்ந்தது.

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பக்கத்து வீடுகளில் தங்கள் நண்பர்களுடன் தங்கி இருந்த இருவரும் இரவு நேரங்களில் தனியாக சந்தித்து மனம்விட்டு பேசி காதலை  வளர்த்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் வழக்கம் போல சம்பவத்தன்று நள்ளிரவு ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து அலெக்ஸ் மற்றும் ஷெர்லின் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த தண்டவாளத்திலும், அருகே உள்ள தண்டவாளங்களில் இரு ரயில்கள் வந்ததால் என்ன செய்வதென்று சிந்திப்பதற்குள்ளாக இருவர் மீதும் ரெயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலர் இந்த காதல் ஜோடி இருள் சூழ்ந்த நேரத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததை பார்த்ததாக கூறிய நிலையில் பனி படர்ந்து காணப்பட்டதால் ரெயில் வந்ததை கவனிக்க காதல் ஜோடி தவறி இருக்கலாம் என்றும் கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கும் போலீசார், காதல் ஜோடி கடந்த 8 மாதங்களாக காதலித்து வரும் நிலையில், இருவரது பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் காதலித்த விவகாரமே தெரியவில்லை என்றனர்.

பகல் நேரங்களில் தண்டவாளத்தில் நடப்பதே விபரீதத்தை உண்டாக்கும் என்ற நிலையில் இருள் நேரத்தில் தண்டவாளத்தை காதலர்கள் சந்திப்பு இடமாக்கியதால் இந்த சோக சம்பவம் அரங்கேறிஉள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments