மாண்டஸ் புயல் எதிரொலி - பொதுமக்களுக்கான அவசர உதவி எண்கள் அறிவிப்பு..!

0 1881

புயல் மற்றும் மழையின் போது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மழை நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அவசர உதவி மற்றும் புகார்களை தெரிவிக்க மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும், 94454 77205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments