சவுதி அரேபியா சென்ற சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பிரமாண்ட வரவேற்பு..!

சவுதி அரேபியா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி ஜின்பிங் சென்ற விமானம் சவுதி அரேபியா வான்வெளியில் நுழைந்ததும் அந்நாட்டு விமானப்படையை சேர்ந்த 4 போர் விமானங்களும், ரியாத்தின் வான் பகுதியில் நுழைந்ததும் மேலும் 6 ஜெட் விமானங்கள் மூலமும் ஜி ஜின்பிங்கின் விமானம் அழைத்துச் செல்லப்பட்டது.
ரியாத் விமான நிலையம் வந்தடைந்ததும், சீனா தேசியக் கொடியின் வண்ணத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் புகையை வெளியிட்டபடி சவுதி அரேபியா விமானங்கள் சென்றன.
பின்னர் இருசக்கர வாகனங்களின் புடை சூழ ஜி ஜின்பிங் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டார்.
Comments