தண்ணீர் இல்லாத 50 அடி கிணற்றில் விழுந்த கோழியை மீட்க, கிணற்றில் குதித்து வெளிவர முடியாமல் சிக்கிய வாலிபர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே படி மற்றும் தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த கோழியை மீட்க கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்ட வாலிபரை தீயணைப்புத் துறையினர் காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெள்ளாள கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் வளர்த்து வந்த கோழி, வீட்டருகே உள்ள பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் விழுந்த நிலையில், கிணற்றில் கயிரு கட்டி இறங்கி கோழியை மீட்ட மாரியப்பன், கிணற்றுக்கு வெளியே வர முயற்சி செய்தபோது வர முடியாமல் மீண்டும் கிணற்றுக்குள்ளே விழுந்துள்ளார்.
இதில் அவருக்கு கழுத்தில் காயமடைந்து கிணற்றிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துள்ளார்.கயிறு பாதி தூரம் மேலே வந்ததும் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்துள்ளார். அப்போது அவருக்கு இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
Comments