காணாமல் போனதாக தேடப்பட்ட சிறுவர்கள் குட்டையில் சடலமாக மீட்பு..!

0 1652

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள குட்டையில் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கோபிசந்த், 5ஆம் வகுப்பு படிக்கும் நகுல் ஆகியோரை புதன்கிழமை மாலை முதல் காணவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை திடீர்நகர் பகுதியில் உள்ள குட்டையில் இரண்டு சிறுவர்கள் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

குட்டையில் சடலமாக மிதந்த சிறுவர்கள் காணாமல் போன கோபிசந்த், நகுல் என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments