குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை

0 1535

குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தம் உள்ள 182 இடங்களில் பாஜக 150 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான 92 இடங்களை விட கூடுதலாக பாஜக முன்னிலையில் உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் முன்னிலை பெற்றுள்ளனர்.

கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பூபேந்திர படேல் வெற்றிபெற்றுள்ளார்.

விராம்காம் தொகுதியில் பேட்டியிட்ட ஹர்திக் படேல், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உள்ளிட்டோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் 19 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 9 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments