மன்னார்குடியில் ரூ.1.24 கோடியில் கட்டப்பட்ட குளத்தின் சுற்றுச்சுவர் 4 நாட்களில் சரிந்து விழுந்தது

0 2800

மன்னார்குடியில் ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட குளத்தின் சுற்றுச்சுவர் 4 நாட்களில் சரிந்து விழுந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார்குடி நகராட்சியில் அமைந்துள்ள  ருக்குமணி குளம் கரைகளை சுற்றி சுற்று சுவர் கல் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

கடந்த  2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த குளத்தில் பதிக்கப்பட்ட சுற்று சுவர் கல்  சரிந்து விழுந்துள்ளது.

இதற்கு  தகுதியில்லாத ஒப்பந்தகாரர்கள் முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments