பயணிகளை ஏற்றுவது தொடர்பாக அரசு-தனியார் பேருந்து நடத்துநர்கள் இடையே தகராறு..!

0 1457

பெரம்பலூரில் தனியார் பேருந்தில் ஏறிய பெண் பயணிகள், மகளிர் இலவசமாக பயணம் செய்யும் அரசுப் பேருந்தைப் பார்த்ததும் கீழே இறங்கியதால், அரசுப் பேருந்து நடத்துநருடன் தனியார் பேருந்து நடத்துநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வட்டாட்சியர் அலுவலக நிறுத்தத்தில் தனியார் பேருந்தில் ஏறிய பெண் பயணிகள் பின்னால் வந்த அரசுப் பேருந்தை பார்த்ததும் கீழே இறங்கிக் கொண்டனர்.

இதனால், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஏன் பேருந்தை எடுத்தீர்கள் என்று கேட்டு அரசு பேருந்து நடத்துநருடன், தனியார் பேருந்து நடத்துநர் சாலையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments