புதிதாக கட்டபட்டுள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சென்றார் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்..!

0 1035

இங்கிலாந்தில் புதிதாக கட்டபட்டுள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சென்ற இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அங்கு நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

லண்டனின் புறநகரான லூடானில் இந்த குருத்வாரா அமைந்துள்ளது..இங்கு சீக்கியர்களின் நிஷான் சாஹிப் கொடியுடன் சிறார்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் வருடத்தின் 365 நாட்களும் சைவ சூப் வழங்கும் இடத்துக்கு சென்ற அவர், அதன் தன்னார்வலர்களை  பாராட்டினார்.

.கொரோனா காலத்தின் போது குருத்வாரா சார்பில் நடைபெற்ற சமூக சேவைகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

குருத்வாராக்கள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டதையும் சார்லஸ் நினைவுகூர்ந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments