திருடுபோன செல்போன்களை FIND MY DEVICE செயலி மூலம் கண்டுபிடித்த போலீசார்

0 1289

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் திருடுபோன செல்போன்களை, FIND MY DEVICE செயலி உதவியுடன் போலீசார் கண்டுபிடித்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில், நண்பர்களுடன் வசித்துவரும் பிரபுதேவா என்பவர், தனது வீட்டிலிருந்த 3 செல்போன்கள் நள்ளிரவில் திருடுபோனதாக போலீசில் புகாரளித்தார். FIND MY DEVICE இணையதளத்தில் செல்போனின் இருப்பிடத்தை தேடியபோது, அவர் வசிக்கும் அதே குடியிருப்பில் செல்போன் இருப்பதாக காட்டியது.

மேல் தளத்திலுள்ள வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது, அங்கிருந்த பையில் பிரபுதேவாவின் செல்போன் உள்பட 10 செல்போன்களும், ஒரு லேப்டாப்பும் கிடைத்தது. அங்கு தங்கியிருந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments