தெரு நாய்களை கொல்ல உத்தரவிட்ட ஊராட்சிமன்றத் தலைவி, கணவர் மீது வழக்கு

0 1036

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தில் தெரு நாய்களை அடித்துக் கொல்ல உத்தரவிட்டதாக ஊராட்சிமன்றத் தலைவி மற்றும் அவரது கணவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சங்கரலிங்கபுரத்தில் தெரு நாய்களை இளைஞர்கள் அடித்துக் கொல்வது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், விலங்கு நல ஆர்வலர் சுனிதா கிருஸ்டி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், புதைக்கப்பட்டிருந்த 10 நாய்களின் சடலத்தை தோண்டியெடுத்து உடற்கூராய்வு செய்ததில் நாய்கள் கொல்லப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதால் ஊராட்சிமன்றத் தலைவி நாகலட்சுமி, கணவர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments