நகை வியாபாரியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை முயற்சி?-போலீசார் விசாரணை

0 1670

திருத்தணி அருகே நகை வியாபாரியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை முயற்சி நடைபெற்றதாக சொல்லப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நகைக்கடை நடத்தி வரும் அம்மாபேட்டையைச் சேர்ந்த ஹேமந்த் குமார், சென்னைக்கு சென்று நகைகளை வாங்கிக் கொண்டு நேற்றிரவு 9 மணியளவில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

ஆர்.கே.பேட்டை அருகே சென்ற போது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதோடு, காரின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்ததை ஹேமந்த் பார்த்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், காரை முன்பக்கமாக வழிமறித்து, துப்பாக்கி முனையில் ஹேமந்திடம் நகைகளை கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

உடனடியாக காரை பின்பக்கமாக இயக்கி, வேகமாக முன்னே சென்று அங்கிருந்து தப்பிய ஹேமந்த், காவல்நிலையத்துக்கு சென்று புகாரளித்துள்ளார். அதன் பேரில், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments