திருமண நிகழ்ச்சியில் பாடல் ஒலிபரப்புவதில் தகராறு.. டிஜே இளைஞரை இருசக்கர வாகனத்தின் சாவியால் குத்தி தாக்குதல்!

0 1604

திருமண நிகழ்ச்சியில் டிஜேவில் பாடல் ஒலிபரப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகனத்தின் சாவியால் தாக்கப்பட்ட டிஜே இளைஞர், நெற்றியில் குத்தியிருந்த சாவியுடன் வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் குப்பம் பகுதியை சேர்ந்த சுனில், செவ்வாய்கிழமை அன்று, அதே பகுதியில் திருமண நிகழ்ச்சியில் டிஜே ஆடியோ போட்டுக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது திருமணத்திற்கு வந்த இளைஞர்கள் சிலர், இரவு 9.30 மணியை கடந்தும் தாங்கள் கேட்கும் பாடல்களை போடச்சொல்லி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

செம்பேடு பகுதியை சேர்ந்த சஞ்ஜய் என்பவர் தான் கையில் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்து குத்தியதில், சாவி பாதி அளவு வரை சுனிலின் நெற்றியில் இறங்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுனிலின் நெற்றியிலிருந்து சாவி அகற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments