சென்னையில் வெள்ள நீரை தடையின்றி வெளியேற்ற தவறியதே 2015 பெரு வெள்ளத்திற்கான காரணம் என தகவல்

0 3280

வெள்ள நீரை தடையின்றி வெளியேற்ற தவறியது, அடையாறு முகத்துவாரத்தை திறக்காதது போன்ற காரணங்களால் 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ளுதல் மீதான செயலாக்க தணிக்கை 2016ல் நடத்தப்பட்டது. அதில், வெள்ள நீரை தடையின்றி வெளியேற்றுவது என்ற இலக்கு எட்டப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அடையாறு முகத்துவாரத்தை திறக்காததால் வெள்ள நீர் தடையின்றி கடலுக்குள் செல்ல விடாமல் தடுக்கப்பட்டு, அடையாறு பகுதியில் வெள்ளம் ஏற்பட காரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைபாடுள்ள திட்டமிடல் மற்றும் பல்வேறு அரசு முகமைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments