கோயிலில் சாமியாடுவது போல் நடித்து பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் கைது!

0 2151

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

பணிக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பால்தங்கம் மற்றும் விஜயன் என்பவருக்கு இடையே அப்பகுதியில் உள்ள பிரம்ம சக்தி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொடைவிழாவில் சாமியாடியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று நடைபெற்ற கொடை விழாவில் பால்தங்கம் சாமியாடியபோது, கோயிலில் பலகாரம் சுடுவதற்காக கொதி நிலையில் இருந்த எண்ணெயை எடுத்து பால்தங்கத்தின் மீது விஜயன் ஊற்றியதில் அவருக்கு, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments