ரயில்களின் வேகம் பனி காலத்தில் அதிகரிக்கப்படும் - இந்திய ரயில்வே

0 1686

பனிமூட்டத்தால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க பனி காலத்தில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 75 கிலோமீட்டராக அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பனிமூட்டம் நிலவும் குளிர்கால மாதங்களில் ரயில்களின் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 60 கிலோமீட்டரில்  இருந்து 75 கிலோ மீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அனைத்து சமிக்ஞை பலகைகள், விசில் பலகைகள், பனி சமிக்ஞை பலகைகள், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள முக்கிய கடவுப்பாதைகளில் மஞ்சள் அல்லது கருப்பு நிறங்களில் ஒளிரும் விதமாக கோடுகள் வரையப்பட்டிருப்பதை அனைத்து ரயில்வே மண்டலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments