ஸ்பெயின் அணியை வீழ்த்திய மொரோக்கோ அணி.. ரசிகர்களிடையே கரைபுரண்ட உற்சாகம் - கலவரமாக மாறிய கொண்டாட்டங்கள்!

0 2380

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றதை அடுத்து, பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் தெருக்களில் வெற்றியடைந்த அணியின் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் கலவரமாக மாறியது.

நாக்அவுட் சுற்றில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷுட்அவுட் முறையில் வீழ்த்தி மொரோக்கோ அணி காலிறுதிக்கு முன்னேறியது.

இதனால், உற்சாகத்தின் எல்லைக்கே சென்ற ரசிகர்கள், பட்டாசுகளை கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போலீஸாருடன் கலவரமாக மாறி தீவிரமடைந்ததால் கண்ணீர் புகை மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் விரட்டியடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments