14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

0 2740

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டைச் சேர்ந்த 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அண்டலவிளை கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளியின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம்வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21-ம்தேதி வீட்டில் இருந்த 5-சவரன் தங்க நகை மற்றும் அறுபதாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு அந்த மாணவி திடீரென மாயமானார்.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் பிரிவு போலீசார் திருப்பூரைச் சேர்ந்த லச்சிபிரபு என்பவரைக் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments