வாகா எல்லை நிகழ்ச்சியை காண ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி -எல்லை பாதுகாப்பு படை

0 1286

இந்தியா-பாகிஸ்தான் தேசிய கொடிகளை கீழிறக்கும் வாகா எல்லை நிகழ்ச்சியை காண ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி வருகிற 1-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான இணையதளத்தை எல்லை பாதுகாப்பு படை தொடங்கி உள்ளது.

பார்க்க விரும்பும் நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், கட்டணம் எதுவுமின்றி 12 பேர்வரை ஒரே குழுவாக முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது இருக்கைகளுக்கு எண் போடும் பணி நடப்பதால் அதன் அடிப்படையில், இருக்கை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments