கடத்திச் செல்லப்பட்ட 3 வயது குழந்தையின் சடலம் மீரட்டில் மீட்பு.. குழந்தையைக் கடத்தியதாக பக்கத்து வீட்டுக்காரர் கைது..!

டெல்லியில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையின் சடலம் மீரட் நகரில் மீட்கப்பட்டுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து 3 வயது குழந்தையைக் காணவில்லை என்று போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் பக்கத்துவீட்டுக்காரர் தான் குழந்தையைக் கடத்தினார் என்பதை கண்டுபிடித்தனர்.
இச்செய்தி தீயாகப் பரவியதும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலைகளில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பக்கத்து வீட்டுக் காரரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments