தந்தையும் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத்துக்கு சிறுநீரக தானம் வழங்கிய லாலு மகளுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பாராட்டு..!

தந்தையும் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத்துக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அவரது மகள் ரோஹினி ஆச்சார்யாவை மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் வெகுவாக பாராட்டியுள்ளார்.
லாலு பிரசாத்தின் கடுமையான விமர்சகர்களில் ஒருவரான கிரிராஜ் சிங், வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்" என்று ட்வீட் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதற்கிடையே தமக்கு ஒரு மகள் இல்லை என்றுஆதங்கம் தெரிவித்துள்ள பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ,தமக்கு மகள் பிறக்காததற்காக கடவுளுடன் சண்டையிட விரும்புகிறேன்" என்றும் ட்வீட் செய்துள்ளார்.
Comments