ஆசியாவில் சக்திவாய்ந்த கோடீஸ்வர ஹீரோக்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்..!

0 1438

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட ஆசியாவில் சக்திவாய்ந்த கோடீஸ்வர ஹீரோக்கள் பட்டியலில், இந்தியாவின் கவுதம் அதானி, தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ்நாடார், பெங்களூரைச் சேர்ந்த அசோக் சூத்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சமூக நலன், கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி போன்ற பணிகளுக்கு, நிறுவனங்களின் உரிமையாளர்கள் அளிக்கும் நன்கொடைகளின் அடிப்படையில், போர்ப்ஸ் பத்திரிக்கையின் 16வது வெளியீட்டில் ஆசியாவின் ஹீரோக்களாக 15 பேரை அடையாளப்படுத்தி உள்ளது.

அதில், அதானி அறக்கட்டளை நடத்தி வரும் கவுதம் அதானி முதலிடத்தையும், தனது பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஷிவ்நாடார் 7 ஆவது இடத்தையும், அசோக் சூத்ரா 11 ஆவது இடத்தையும் பிடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments