தீராத செல்போன் பேச்சு தாலியால் கழுத்தை இறுக்கி காதல் மனைவி கொலை…! கை குழந்தையுடன் ஓடிய இளைஞர்

0 1996

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை தாலியால் கழுத்தை இருக்கி கொலை செய்து விட்டு கைக்குழந்தையுடன் தலைமறைவான இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தீராத செல்போன் பேச்சு கொலையில் முடிந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திருவண்ணாமலை மாவட்டம் அனப்பத்தூரை சேர்ந்தவர் ரஞ்சித்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் தனது எதிர் வீட்டில் வசித்து வந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில் கவுசல்யா சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.

தினமும் வேலைக்கு சென்று வீடு திரும்பிய பின்னர் தனது நண்பர்களுடன் செல்போனில் பேசுவதை கவுசல்யா வாடிக்கையாக்கியதாக கூறப்படுகின்றது.

எந்த வேலைக்கும் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி சுற்றித்திரிந்த ரஞ்சித், கவுசல்யாவிடம் யாரிடம் செல்போன் பேசுகிறாய் என்று கேட்டு அடித்து சித்ரவதை செய்வதை வாடிக்கையாக்கி உள்ளார்.

டிவியை தூக்கிப்போட்டு உடைத்து தாக்கியதில் கவுசல்யா முகம் வீங்கி கடும் அவதிக்குள்ளனார்

காதலித்து திருமணம் செய்ததால் வரதட்சனை சீர்வரிசை ஏதும் தரவில்லை என்று ரஞ்சித்தின் பெற்றோர் தங்கள் பங்கிற்கு கவுசல்யாவை வதைத்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 22 ந்தேதி மோரணம் காவல் நிலையத்தில் கவுசல்யா புகார் அளித்தார்.

போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இரு தரப்பையும் அழைத்து பேசி சமாதானமாக செல்லும் படி அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் அமர்ந்தவாறு செல்போனில் பேசிக் கொண்டிருந்த கவுசல்யாவின் தாலியை பிடித்து பின் பக்கமாக இழுத்து கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த ரஞ்சித் தனது ஒன்றரை வயது குழந்தையை தோக்கிக் கொண்டு ஓடிவிட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

விரைந்து வந்த போலீசார் கவுசல்யாவின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய ரஞ்சித் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் ரஞ்சித்தை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரது பெற்றோரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மனைவி யாரிடம் பேசுகிறார் ? என்ன காரணத்துக்காக பேசுகிறார் ? என்ற பொறு மை இல்லாமல், தன்னை காதலித்து நம்பி வந்த பெண்ணை தினம் தினம் சந்தேகத்தீயால் சுட்டதோடு , இறுதியில் கொடூரமாக கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments