கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 852 மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்..!

0 1239

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த  852 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மின்சாரம்  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  தெரிவித்துள்ளார். 

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கோடியே 61 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்க துணை நின்ற ஆயிரத்து 970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களையும்  பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும். தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments